சிவ வடிவங்கள் அசுவாருட மூர்த்தி*

Submitted by Anonymous (not verified) on Fri, 01/05/2018 - 10:16

*47 / 64 சிவ வடிவங்கள்*

*47. அசுவாருட மூர்த்தி*

மாணிக்கவாசகர் சிவபெருமானின் கூற்றுப்படி ஆவணி திங்களில் குதிரைகள் வரும் என அரண்மனையில் காத்திருந்தார். அரசரும் மாணிக்கவாசகரை அழைத்து குதிரைகள் எப்பொழது வருமென கேட்டார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் வரும் என்றார்.

அனைவரும் காத்திருந்தனர், ஆனால் குதிரைகள் வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ஆகவே மாணிக்கவாசகரைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தார்.

சிறையில் மாணிக்கவாசகர் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தபடியே இருந்தார் பாடல்கள் பலப்பாடியபடி இறைவனை துதித்தார்.